சென்னை: வேளச்சேரி விஜயநகரில் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் வேளச்சேரி - தரமணி, வேளச்சேரி-கைவேலி சாலைகளை இணைக்கும் வகையில் ரூ.108 கோடியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2016-ம் ஆண்டு துவங்கப்பட்டு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கடந்தாண்டு நவம்பர் மாதம் விஜயநகர் பேருந்து நிலையம் அருகே தரமணி - வேளச்சேரி ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிலையில் தற்போது வேளச்சேரி தாம்பரம் விரைவு சாலை வழியாக கைவேலி வரை இரண்டாம் பாதியை வரும் 17ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
இதையும் படிங்க: ஐஐடி மாணவன் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற முடிவு...