ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று துபாய் பயணம் - துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சி

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று துபாய் செல்கிறார். அங்கு நடைபெற்று வரும் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்து, துபாய் மற்றும் அபுதாபியில் தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அந்நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று துபாய் பயணம்
முதல்வர் ஸ்டாலின் இன்று துபாய் பயணம்
author img

By

Published : Mar 24, 2022, 9:37 AM IST

Updated : Mar 24, 2022, 12:01 PM IST

துபாய் நாட்டில், அக்டோபர் 1, 2021 முதல் தொடங்கி மார்ச் 31, 2022 வரை உலகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில், மார்ச் 25, 2022 முதல் மார்ச் 31, 2022 வரை, தமிழ்நாடு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரங்கினை முதலமைச்சர் ஸ்டாலின் மார்ச் மாதம் 25ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப்படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்படவுள்ளன.

தமிழ்நாட்டின் சிறப்பு : தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மோட்டார் வாகனங்கள், உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள், காற்றாலைகள் உட்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இந்த அரங்கிற்கு வருகை புரியும் அனைவரும், தமிழ்நாட்டின் அனைத்து சிறப்புகளையும் ஒரே இடத்தில் பார்வையிடும் அளவிற்கு, இந்த அரங்கம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உலகக் கண்காட்சியில், இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில், பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும், பிரத்யேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை சுமார் 2.50 கோடி நபர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சரின் பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களுடனான சந்திப்பு, துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களுடன் சந்திப்பு :இவை மட்டுமின்றி, புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்புக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொழில் துறை அமைச்சர், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் முதலமைச்சர் தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க : ரயில் குளிர்சாதனப் பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்க ஏற்பாடுகள் தீவிரம்

Last Updated : Mar 24, 2022, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.