ETV Bharat / state

அதிமுக ஆட்சியை விட தற்போது ஆவினில் விற்பனை அதிகரித்துள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்

'அதிமுக ஆட்சியில் பால் பொருட்கள் விற்பனை தீபாவளியின்போது 55 கோடி ரூபாய்க்குத்தான் விற்பனை நடந்தது. ஆனால், கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் 85 கோடி ரூபாயாகவும், இந்த தீபாவளியின்போது 116 கோடி ரூபாயாகவும் உயர்த்திக் காட்டியிருக்கிறார்கள். இது திமுகவின் பெரிய சாதனை' என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Dec 18, 2022, 6:49 PM IST

அதிமுக ஆட்சியை விட தற்போது ஆவினில் விற்பனை அதிகரித்துள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்
அதிமுக ஆட்சியை விட தற்போது ஆவினில் விற்பனை அதிகரித்துள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (18.12.2022) பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் இல்லத் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 'நாசர் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உடன் பால் விலை குறைந்துவிட்டது. அதுவே மக்களுக்கு எவ்வளவு பெரிய சாதகமான சூழல் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்ல, ஆவினின் புதிய பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டதும் நாசர் இருக்கக்கூடிய நேரத்தில்தான்", எனத் தெரிவித்தார்.

’மேலும் தீபாவளியின்போது நெய் விற்பனை அதிகமானது, புதிய இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 12 விதமான கேக் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் பால் பொருட்கள் விற்பனை தீபாவளியின்போது 55 கோடி ரூபாய்க்குத்தான் விற்பனை நடந்தது. ஆனால், கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் 85 கோடி ரூபாயாகவும், இந்த தீபாவளியின்போது 116 கோடி ரூபாயாகவும் உயர்த்திக் காட்டியிருக்கிறார்கள். இது திமுகவின் பெரிய சாதனை’, எனக் கூறினார்.

மேலும், ’இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்துக்கு வந்திருக்கிறது என்று பிரபலமான ஆங்கில பத்திரிகையான இந்தியா டுடே-வில் வெளிவந்த செய்திகளையெல்லாம் இங்கே சுட்டிக்காட்டினார்கள்.

நான் ஏற்கெனவே சொன்னேன், கடந்த ஆண்டே குறிப்பிட்டுச் சொன்னேன். 'நம்பர் ஒன் முதலமைச்சர் ஸ்டாலின்' என்று சொல்வதைவிட 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று சொல்ல வேண்டும், அதுதான் எனக்குப் பெருமை என்று சொன்னேன்’ எனத் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், ’இந்த ஆண்டு அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று சொன்னால், தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, இங்கிருக்கக்கூடிய அமைச்சர்கள் மற்றும் எல்லோருடைய கூட்டு முயற்சியால் தான் இன்றைக்கு இந்த வெற்றி நமக்குக் கிடைத்திருக்கிறது’ எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'அதிமுக - பாஜக உறவு என்பது எலிக்கும் தவளைக்கும் உள்ள உறவு' - அமைச்சர் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.