சென்னை: போக்குவரத்துக் கழகத்தில் 210 சிற்றுந்துகள் உள்ள நிலையில் தற்போது 66 சிற்றுந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. போதிய பயணிகள் வரவேற்பின்மை, மெட்ரோ, புறநகர் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களால் சிற்றுந்து சேவை குறைக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மெட்ரோ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்துள்ளது. இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களையும், பேருந்து நிலையங்களையும் இணைக்கும் வகையில் 12 சிற்றுந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிற்றுந்து சேவையை மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
அதேபோல் நகரின் முக்கியப் பகுதிகளில் நிறுத்தப்பட்ட 13 சிற்றுந்து போக்குவரத்துச் சேவை தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக வருவாய் உயர்த்துவதுடன் மெட்ரோ ரயில் போக்குவரத்துச் சேவை ஊக்குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஓபிஎஸ் வந்த விமானத்தில் முதியவருக்கு நேர்ந்த சோகம்