ETV Bharat / state

ரூ.15 கோடி கருவூல அலுவலகக் கட்டடங்கள்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்!

author img

By

Published : Oct 25, 2021, 2:30 PM IST

கருவூலக் கணக்குத் துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று மாவட்ட கருவூல அலுவலகக் கட்டடங்கள், நான்கு சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

cm
cm

சென்னை: தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதித்துறையின் கீழ் செயல்படும் கருவூலக் கணக்குத் துறை சார்பில் 15 கோடியே 10 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் மூன்று மாவட்ட கருவூல அலுவலகக் கட்டடங்கள், மணச்சநல்லூர், பூவிருந்தவல்லி, மயிலாடுதுறை மற்றும் திண்டிவனம் ஆகிய இடங்களில் நான்கு சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக இன்று (அக்.25) திறந்துவைத்தார்.

மேம்பட்ட நிர்வாக வசதிக்காகவும், அரசுக்கு ஏற்படும் தொடர் வாடகை செலவினத்தைத் குறைக்கவும், மின் ஆளுமை (e - Governance) திட்டங்களை துரிதமாக செயல்படுத்தவும், விலை மதிப்புமிக்க முத்திரைத்தாள்கள் மற்றும் சேம பாதுகாப்பு பொருள்களை பாதுகாக்கவும் , ஓய்வூதியர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கவும் இந்தப் புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் பொது மக்களுக்கும், பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் ( Drawing & Disbursing Officers ), ஓய்வூதியர்களுக்கும் விரைவாக சேவை வழங்க முடியும்.

7 புதிய கட்டடங்கள் திறப்பு

அந்த வகையில் , திருநெல்வேலியில் 21 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவில் 3 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காஞ்சிபுரத்தில் 21 ஆயிரத்து 658 சதுர அடி பரப்பளவில் 4 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திண்டுக்கல்லில் 10 ஆயிரத்து 671 சதுர அடி பரப்பளவில் 2 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று மாவட்ட கருவூல அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மணச்சநல்லூர், பூவிருந்தவல்லி, மயிலாடுதுறை மற்றும் திண்டிவனம் ஆகிய இடங்களில் சார் கருவூல அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் 15 கோடியே 10 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன.

இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், கருவூவ கணக்குத்துறை ஆணையர், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மனோன்மணியம் பல்கலைக்கழகமே முதுகெலும்புடன் செயல்படு! - சு.ப. உதயகுமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.