ETV Bharat / state

ஐஏஎஸ் தேர்வில் வென்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் பரிசு! - இந்திய குடிமைப்பணிகள் தேர்வு

சென்னை: இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளான பூரணசுந்தரி, பாலநாகேந்திரன் ஆகியோரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டி, நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

IAS Officer
cm met with IAS Officer
author img

By

Published : Aug 24, 2020, 1:38 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், 2019ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த K. பூரணசுந்தரி, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பாலநாகேந்திரன் ஆகியோரைப் பாராட்டி, நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அத்தோடு, அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில்
சிறப்பான முறையில் பணியாற்றிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வின்போது, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வி. சரோஜா, தலைமைச் செயலர் க. சண்முகம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலர் சா. விஜயராஜ் குமார், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஈ டிவி பாரத் நேர்காணல்: பூரண சுந்தரி, ஐஏஎஸ் தேர்வானவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.