ETV Bharat / state

தூத்துக்குடி, தேனியில் புதிய பால் பண்ணைகள்- முதலமைச்சர் - சட்டப்பேரவை செய்திகள்

சென்னை: தூத்துக்குடி, தேனி மாவட்டங்களில் புதிய பால் பண்ணைகள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

chief-minister-palanisamy-announcement-for-dairy-department

author img

By

Published : Mar 24, 2020, 3:10 PM IST

நடைபெற்றுவரும் தமிழ்நாடு மானிய பட்ஜெட் கூட்டுத்தொடரில், சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பால் வளத் துறைக்கைான புதிய திட்டங்களை வெளியிட்டார். அப்போது,

  • பால் உற்பத்தி திறன் அடிப்படையின் மூலம் பிறந்த கிடாரிகளின் வம்சாவழி சோதனை திட்டத்தின் மூலம் 20.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 180 உயர்ரக பொலி காளைகள் உற்பத்தி செய்யப்படும்.
  • பால் உற்பத்தியாளர்கள் கால்நடைகளுக்கு தரமான பசுந்தீவனம் அளிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, 25 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு விவசாயிகளின் பட்டா நிலங்கள் கண்டறியப்பட்டு, அதில் பசுந்தீவன புல் பயிரிட மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மூலம் 37.50 கோடி ரூபாய் மானியத்தில் வேளாண் உள்ளீடுகள் வழங்கப்பப்படும்.
  • மேலும், அந்நிலங்களில் 50 கோடி ரூபாய் மானியத்தில் ‘பிரதம மந்திரி கிரிஷி சின்ஜாயி யோஜனா’ திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன வசதிகள் செய்து தரப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருள்கள் தயாரிக்கும் வசதியுடன் கூடிய புதிய பால் பண்ணை, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • தேனி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருள்கள் தயாரிக்கும் வசதியுடன் கூடிய புதிய பால் பண்ணை 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • அதிகரித்து வரும் தயிர், மோர், லஸ்ஸி, பன்னீர் போன்ற பால் உப பொருட்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், திருவண்ணாமலை, மாதவரம், சோழிங்கநல்லூர் மற்றும் அம்பத்தூரில் உள்ள பால் பண்ணைகளில் பால் உபபொருள்கள் தயாரிப்பதற்குத் தேவையான உபகரணங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதையும் படிங்க: ஆதிதிராவிடர் நலத் துறைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.