சென்னை: தமிழ்நாட்டில் கரோனா 3ஆவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாமில், 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று (செப்.19) மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
திடீர் ஆய்வு
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்று வரும் முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தடுப்பூசி போடுவதற்காக வரிசையில் காத்திருந்தவர்களிடம் அங்குள்ள வசதிகள் பற்றி கேட்டறிந்தார். மதியம் 2 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 9 லட்சத்து 80 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிலிருந்து பாறைகள் வழங்க வேண்டும் - கேரள அமைச்சர் கோரிக்கை