ETV Bharat / state

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை பசும்பொன் செல்லவில்லை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பசும்பொன் செல்லவில்லை

author img

By

Published : Oct 29, 2022, 9:45 AM IST

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால், நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, வரும் 30-10-2022 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் திருமகனாரின் 115ஆவது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில் ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை.

முதலமைச்சர் சார்பில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உள்ளிட்டோர் இவ்விழாவில் நேரில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்துவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்றிரவு மு.க. ஸ்டாலின் வழக்கமான முதுகுவலி பரிசோதனை மேற்கொள்வதற்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். தற்போது பரிசோதனை முடிவடைந்த நிலையில் வீடு திரும்பினார் எனத்தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: முதலமைச்சரின் திடீர் மருத்துவமனை அனுமதி; என்னாச்சு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.