சென்னை : தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டகலை மூலம் உற்பத்தி செய்யப்படும் 20 நடமாடும் தேநீர் கடைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மூலம் தேநீர் கடைகள் செயல்படும்.
15 லட்சம் மதிப்பிலான வண்டிகளை 2 லட்சம் டெபாசிட் செலுத்தி மழைவாழ் மக்கள் கடைகளை நடத்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக சென்னையில் 10 கடைகள், திருப்பூர், ஈரோட்டில் தலா மூன்று கடைகள், கோயம்புத்தூரில் நான்கு கடைகள் செயல்படும்.
வரவேற்பை பொறுத்து கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக செயலாளர் சுப்ரியா சுலே, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : 'ஆதாரமில்லாத கருத்தைப் பரப்புகிறார் அண்ணாமலை': திராவிடர் கழகத்தினர் புகார்!