ETV Bharat / state

தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கி கௌரவித்த முதலமைச்சர்! - tamilnadu govt

சென்னை: தமிழ்நாடு தினம் விழாவையொட்டி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2019-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை  வழங்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பித்தார்.

தமிழ்ச் செம்மல் விருது கௌரவித்த முதலமைச்சர்!

author img

By

Published : Nov 3, 2020, 3:31 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (நவ.3) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு தின விழாவையொட்டி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2019-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 37 விருதாளர்களில், 19 விருதாளர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

தமிழ் வளர்ச்சிக்காகத் தனி ஆளாகத் தொண்டு செய்தும், தமிழ் அமைப்பு வைத்துத் தமிழ் மொழிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை மாவட்டந்தோறும் கண்டறிந்து, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்ச் செம்மல் விருது ஆண்டுதோறும், ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் என்றவாறு வழங்கப்படும் என்றும், இவ்விருது பெறுபவருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கான விருதுத்தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதன்படி, 2015-ஆம் ஆண்டு முதல் தமிழ்ச் செம்மல் விருதுகளை தமிழ்நாடு அரசு வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

அந்த வகையில், 2019-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட முனைவர் கோ.ப. செல்லம்மாள் (சென்னை மாவட்டம்), முனைவர் மரியதெரசா (திருவள்ளூர் மாவட்டம்), முனைவர் எஸ். ஸ்ரீகுமார் (காஞ்சிபுரம் மாவட்டம்), ச. இலக்குமிபதி (வேலூர் மாவட்டம்), கவிஞர் அ.க. இராசு (எ) பாளைவேந்தன் (கிருஷ்ணகிரி மாவட்டம்), கவிஞர் எறும்பூர் கை. செல்வகுமார் (திருவண்ணாமலை மாவட்டம்), கல்லைக்கவிஞர் வீ. கோவிந்தராசன் (விழுப்புரம் மாவட்டம்), முனைவர் எஸ்.எம். கார்த்திகேயன் (கடலூர் மாவட்டம்), முனைவர் த. மாயகிருட்டிணன் (பெரம்பலூர் மாவட்டம்), முனைவர் து. சேகர் (அரியலூர் மாவட்டம்), திரு.வ. முத்துமாரய்யன் (சேலம் மாவட்டம்), கவிஞர் மா. இராமமூர்த்தி (தருமபுரி மாவட்டம்) உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட 37 விருதாளர்களில், 19 விருதாளர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருதுகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.