முன்னாள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவரும், தற்போதைய தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
வாழ்த்துச் செய்தியோடு, பொது வாழ்வில் சிறப்பாகப் பணியாற்றி வரும் தமிழிசை சௌந்தர்ராஜன், நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் அனைத்து வளமும், நலமும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தனக்கு வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி கூறினார்.
இதையும் படிங்க : அடிபணிவோம் அவசிய கட்டளைக்கு... அறிவுரை கூறும் தமிழிசை