காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த அரசு தோல்வி அடைந்ததையடுத்து, பாஜக மூத்தத் தலைவர் எடியூரப்பா நான்காவது முறையாக கர்நாடக முதலமைச்சராக நேற்று மாலை பதவியேற்றார்.
இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.