ETV Bharat / state

வாக்கு மையங்களில் கேமரா பொருத்தும் பணி: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தலைமைத் தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை - தமிழ்நாடு செய்திகள்

வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற உள்ள கேமரா பொருத்தும் பணிகளுக்காக பள்ளிகள் திறந்திருப்பதை உறுதி வேண்டுமென, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தலைமைத் தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சத்யப்பிரதா சாகு
சத்யப்பிரதா சாகு
author img

By

Published : Mar 19, 2021, 1:00 PM IST

வரும் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை வாக்குச்சாவடி மையங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த நாள்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யப்பிரதா சாகு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து, ”தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் வருகின்ற ஆறாம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 90,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைய உள்ளன. மார்ச் 22, 23, 27 ஆகிய தேதிகள் மற்றும் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை வாக்குச்சாவடி மையங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுவதால், பள்ளிகள் திறந்து இருப்பதை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.