ETV Bharat / state

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி: தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் ஆலோசனை

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களோடு தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

sathya pratha saku
sathya pratha saku
author img

By

Published : Nov 30, 2020, 9:21 PM IST

கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது முதல் டிசம்பர் 15ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுடைய வாக்காளர்கள், பெயரை நீக்க விரும்புவோர், திருத்த விரும்புவோர், இடமாற்றம் விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் தொடர்பாக சிறப்பு முகாம்கள் 21 மற்றும் 22ம் தேதியும் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான விண்ணப்பங்கள் அனைத்தும் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு, ஜனவரி 20ஆம் தேதி இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் ஆலோசனை

இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடர்பாகா தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு காணொலி காட்சி வாயிலாக தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: புதுவையில் நாளை முதல் மருத்துவக் கல்லூரிகள் திறப்பு!

For All Latest Updates

TAGGED:

tn ceo meet
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.