ETV Bharat / state

சிதம்பரம் வீடு தான் சிபிஐ-க்கு பொழுதுபோக்கு - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி - cbi raid

பொழுது போகவில்லை என்றால் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சோதனைக்கு செல்வார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி பேச்சு
கே.எஸ்.அழகிரி பேச்சு
author img

By

Published : Jul 9, 2022, 8:53 PM IST

சென்னை: முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டுதுறை அமைச்சர் பல்லம் ராஜு மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி கூட்டாக சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய அமைச்சர் பல்லம் ராஜு, கடந்த காலத்திலும் தற்போதும் தீவிரவாத சம்பவங்கள் எங்கு நடைபெறுகிறதோ அந்த சம்பவத்தில் தொடர்புடைய யாரேனும் ஒருவர் பிஜேபி கட்சிக்கு நெருக்கமாக உள்ளனர் எனவும் உதயப்பூரில் நடந்த கொலை மற்றும் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற காவலர் கொலை உள்ளிட்டவையில், குற்றவாளிகள் ஆளும் பிஜேபி கட்சிக்கு தொடர்புடையவர்களாக உள்ளனர் எனவும் குற்றஞ்சாட்டினார்.

நாட்டை பிளவுபடுத்த பிஜேபி இதுபோன்று ஈடுபடுகிறதா அல்லது தன்னுடைய கொள்கையை மக்களுக்கு கொண்டு சேர்க்க இதுபோன்று செயல்படுகிறதா என பல்வேறு கேள்விகள் எழுகின்றது என்றார். இதையெல்லாம் மக்களிடையே கொண்டு சேர்க்க பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, பொழுது போகவில்லை என்றால் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டில் சோதனைக்கு செல்கின்றனர்; இது அரசியல் பழிவாங்கும் நோக்கம் என்றார்.

எங்களிடம் ஆக்சிஜன் உள்ளது பிஜேபியிடம் கார்பன் டை ஆக்சைடு உள்ளது; ஆக்சிஜன் உள்ளதால் ஆரோக்கியமாக உள்ளோம் கார்பன் டை ஆக்சைடு இருப்பதால் பிஜேபி நோயாளி போல் இருக்கிறது என கிண்டலாக பேசினார். திமுக கொடுத்த வாக்குறுதிகளை அதிக அளவில் நிறைவேறுத்தியுள்ளது; ஆனால் பிஜேபி எட்டு ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை எனவும் தமிழ்நாட்டில் ஆன்மீகம் உள்ளது; ஆனால் மதம் கிடையாது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: லண்டனில் இருந்து வந்த சாவி.. கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.