சென்னை: பதிப்புத்துறையில் இந்தியாவிற்கும், ஃபிரான்சிற்குமான உறவை மேம்படுத்தியதற்காக காலச்சுவடு பதிப்பகத்தின் கண்ணனுக்கு செவாலியே விருது கிடைத்திருக்கிறது. விருது பெற்ற கண்ணனுக்கு பல எழுத்தாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறுகையில், நெருங்கிய நண்பரும் சிறந்த கட்டுரையாளருமான காலச்சுவடு பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநருமான கண்ணனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது.
பதிப்புத்துறையில் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை செய்து வரும் கண்ணனுக்கு இது மிகவும் பொருத்தமான அங்கீகாரம்; கலை இலக்கியம் உள்ளிட்ட பண்பாட்டு தளத்திலும் அறிவுத்துறையிலும் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் இடையேயான உறவை செழுமைப்படுத்தி வரும் கண்ணனின் பணிகள் மேலும் சிறக்க இந்த அங்கீகாரம் உதவும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு விருது