ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா : 9-வது சுற்று முடிவுகள்

author img

By

Published : Aug 8, 2022, 6:58 AM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 9 வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்: 9 வது சுற்றில் இந்தியாவின் தடங்கள்!

சென்னை: 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 9 வது சுற்றின் முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்திய ஓபன் ஏ Vs பிரேசில் : ஹரிகிருஷ்ணா பேண்டேலா - லூயிஸ் பாலு விளையாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய ஹரி, 77 வது நகர்த்தலில் ஆட்டத்தை சமன் செய்தார். அடுத்ததாக விதித் குஜராத்தி - அலெக்ஸ்சண்டர் விளையாடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய விதிக், 48 வது நகரத்தலில் ஆட்டத்தை சமன் செய்தார்.

தொடர்ந்து அர்ஜுன் எரிகேசி - க்ரிகோர் சேவாக் ஆடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய அர்ஜுன், 31 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனையடுத்து சசிகிரன் - ஆண்டரே ஆடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய சசி, 49 வது நகர்த்தலில் வெற்றி அடைந்தார்.

இதில் நாராயணன் ஓய்வில் இருந்தார். இதனால் 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா பி Vs அஜர்பைஜன் : குகேஷ் - ஷாக்கரியர் களமாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், தனது 34 வது நகர்த்தலில் மாற்றத்தை சமன் செய்தார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இதுவே முதல் சமன் செய்யப்பட்ட போட்டியாக பார்க்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகில் சரின் - ரஃப் மமேடோவ் களமாடியபோது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய நிகில், 33 வது நகர்த்தலில் ஆட்டத்தை சமன் செய்தார். அதேபோல், பிரக்ஞனாந்தா - வசிப் டூரர்பேயில் விளையாடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய வசிப், 66 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து ரௌனக் சாத்வாணி - நிஜாட் அப்சோவ் விளையாடும்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய சாத்வாணி, 49 வது நகர்த்தலில் ஆட்டத்தை சமனில் முடித்தார். இந்த ஆட்டத்தின்போது அதிபன் ஓய்வில் இருந்தார். இதன் மூலம் 2-2 என்ற புள்ளி கணக்கில் இந்தியா ஆட்டத்தை சமன் செய்தது.

இந்தியா சி Vs பராகுவே : கங்குலி சூர்யா சேகர் - ஆக்சில் பேச்மேன் களம் கண்டபோது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய கங்குலி, 37 வது நகர்த்தலில் தோல்வியைத் தழுவினார். தொடர்ந்து சேதுராமன் - நியூரிஸ் களமாடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய சேதுராமன், 27 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து விளையாடிய கார்த்திகேயன் முரளி - ஜோஸ் பெர்னாண்டோ, கருப்பு நிற காய்களுடன் விளையாடி, முரளி தனது 44 வது நகர்த்தலில் வெற்றி அடைந்தார். மேலும் பூர்ணிக் அபிமன்யு - ருபேண் விளையாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய அபிமன்யு, 37 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

இந்த ஆட்டத்தில் அபிஜித் குப்தா ஒய்வில் இருந்தார். இதனால் 3-1 புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய பெண்கள் ஏ Vs போலந்து : கொனேறு ஹம்பி - அலீனா விளையாடும்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஹம்பி, 35 வது நகர்த்தலில் ஆட்டத்தை சமன் செய்தார். அதேபோல் ஹரிகா துரோணவள்ளி - மோனிகா விளையாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய ஹரிகா, தனது 41 வது நகர்த்தலில் ஆட்டத்தை சமன் செய்தார்.

இதனையடுத்து வைஷாலி - ஒலிவியா விளையாடும்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய வைஷாலி, 80 வது நகர்த்தலில் தோல்வியைத் தழுவினார். தொடர்ந்து தானியா சச்சிதேவ் - மரியா விளையாடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய தானியா, 33 வது நகர்த்தலில் ஆட்டத்தை சமன் செய்தார்.

இந்த ஆட்டத்தின்போது பக்தி குல்கர்னி ஓய்வில் இருந்தார். இதன் மூலம் 1.5-3.5 என்ற புள்ளி கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

இந்திய மகளிர் பி Vs ஸ்விட்சர்லாந்து : வங்கிடா அகர்வால் - லேனா களமாடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய வங்கிடா, 68 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். பத்மினி ராவுட் - காசல் களம் கண்டபோது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பத்மினி, 62 வது நகர்வில் வெற்றி பெற்றார்.

கோமஸ் மேரி ஆன் - குண்டுலா ஆடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய மேரி, 35 வது நகர்வில் வெற்றி அடைந்தார். அதேபோல் திவ்யா தேஷ்முக் - காமிலே ஆடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய திவ்யா, 76 வது நகர்வில் வெற்றி பெற்றார்.

இந்த ஆட்டத்தில் சவுமியா சாமிநாதன் ஓய்வில் இருந்தார். இதனால் இந்தியா 4-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய பெண்கள் சி Vs எஸ்டோனியா : இஷா கரவடே - மை நர்வா விளையாடும்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய இஷா, 37 வது நகர்த்தலில் ஆட்டத்தை சமன் செய்தார். நந்திதா - மர்க்ரீட் விளையாடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய நந்திதா, 46 வது நகர்த்தலில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து சாஹிதி வர்ஷினி - அனஸ்தஸ்யா ஆடும்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய சாஹிதி, 57 வது நகர்வில் வெற்றி அடைந்தார். அதேபோல் விஷ்வா வைஷ்ணவாலே - சோபியா ஆடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய விஷ்வா, தனது 29 வது நகர்வில் ஆட்டத்தை சமன் செய்தார்.

இந்த ஆட்டத்தின்போது பிரத்யுஷா போடா ஓய்வில் இருந்தார். இதன் மூலம் இந்தியா 3-1 என்ற புள்ளி கணக்கு வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டி... ஹாங்காங் வீரர் திடீர் தர்ணா...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.