சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை வான் நுண்பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது, திருவனந்தபுரத்திலுருந்து வந்த கமரூதீன் (27) ரகீலா (23) ஆகிய இருவரையும் சோதனை செய்தபோது அவர்கள் ஒத்துழைக்காமல் அந்த இடத்தை விட்டு நழுவ முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த அலுவலர்கள் அவர்களது உடைமைகளை சோதனையிட்டதில் கமருதீன் பையில் இரண்டு தங்க செயின், நான்கு தங்க மோதிரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ரகீலாவிடம் 19 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க சங்கிலி கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக இருவரிடமும் சுங்கத் துறையினர் நடத்திய விசாரணையில் சார்ஜாவிலிருந்து வந்த பயணி ஒருவா் விமானத்தில் இவர்களிடம் இந்த நகைகளை கொடுத்து வெளியில் வந்து வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளாா். கணிசமாக பணமும் தருவதாக கூறியதாக தெரியவந்தது. ஆனால் இவர்களிடம் நகைகளை கொடுத்த அந்த நபர் தப்பிவிட்டாா். காவல் துறையினர் அந்த நபரை வலைவீசி தேடிவருகின்றனர்.