நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், கரோனா தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் குறையாமல் தீவிரமாகிக் கொண்டே இருக்கிறது.
கரோனா வைரஸ் தொற்றால் தினமும் 600 முதல் 800க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று (மே 27) மட்டும் 817 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 545ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் கரோனா பாதிப்பு 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 558 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மண்டல வாரியாக கரோனா பாதிக்கப்பட்டோரின் விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
![மண்டல வாரியாக கரோனா பாதிக்கப்பட்டோரின் பட்டியல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/cgc_2805newsroom_1590643551_452.jpg)
மேலும், 5 ஆஆயிரத்து 765பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து, தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதுவரை சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 93 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: தீவிரம் அடையும் கரோனா: மத்திய மருத்துவக் குழு ஆய்வு