சென்னை: மெரினாவில் கம்பத்தின் உச்சியில் ஏறி பெண் உதவி ஆய்வாளர் கூறினால்தான் இறங்குவேன் என தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையின் மணல் பரப்பு அருகே இருக்கக்கூடிய உயரமான கம்பம் ஒன்றில், 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் குடிபோதையில் சுமார் 35 அடி உயரம் ஏறி கீழே குதித்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மின்கம்பத்தில் ஏறி நின்ற இளைஞரை கீழே இறங்கி வருமாறு சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ராட்சத லிப்ட் உதவியுடனும் இளைஞரை கீழே இறக்க முயன்றனர். ஆனால், மேலே ஏறி நின்ற இளைஞர், சத்யா நகர் பெண் காவல் உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து தன்னை கீழே இறங்கச் சொன்னால் கீழே இறங்குவேன் என கூறினான்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் கீழே இறங்குமாறு வேண்டுகோள் விடுத்தும், தொடர்ந்து கம்பத்தில் ஏறி நின்ற இளைஞனை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் ராட்சத லிப்ட் உதவியுடன் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னையின் முக்கிய இடமான மெரினா கடற்கரை பகுதியில் இளைஞன் ஒருவன் கம்பத்தில் ஏறி மிரட்டல் விடுத்ததால் ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
மின் கம்பத்தில் ஏறி நின்ற இளைஞரால் பரபரப்பு - chennai youth suicide attempt
காவல் உதவி ஆய்வாளர் கீழே இறங்குமாறு வேண்டுகோள் விடுத்தும், தொடர்ந்து கம்பத்தில் ஏறி நின்ற இளைஞனை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் ராட்சத லிப்ட் உதவியுடன் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.