சென்னை மயிலாப்பூர் துர்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (25). பட்டதாரியான இவர், ஸ்விக்கி புட் டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக கோபால கிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (அக். 21) மாலை வீட்டில் உள்ள கழிவறைக்கு மண்ணெண்ணெயுடன் சென்ற கோபால கிருஷ்ணன் திடீரென்று மேலே ஊற்றி தீ வைத்து கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், உடனே வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கோபால கிருஷ்ணனின் உடல் 90 விழுக்காடு எரிந்தது. உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சிகிச்சைப் பெற்று வந்த கோபால கிருஷ்ணன், இன்று (அக். 22) காலை உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து மெரினா கடற்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கடந்த சில மாதங்களாக கோபால கிருஷ்ணன் ஒரு பெண்ணை காதலித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இதனால் மனமுடைந்த கோபால கிருஷ்ணன், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க...நாகையில் மர்மமான முறையில் இளைஞர் மரணம்!