ETV Bharat / state

புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை! - Chennai newlywed woman commits suicide

சென்னை: புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை
புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை
author img

By

Published : Jul 31, 2020, 5:14 PM IST

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகணேஷ்(29), பிரிய தர்ஷினி(29) ஆகியோர் 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். தற்போது சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் ஹரிகணேஷ் மேலாளராக பணியாற்றி வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பிரிய தர்ஷினி பணியாற்றி வந்தார்.

இருவரும் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று (ஜூலை 31) பிரியதர்ஷினி தூக்கிட்டு உயிரிழந்தார். தகவலறிந்த கே.கே. நகர் காவல் துறையினர் அவர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறையினர் தரப்பில், "கரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தே பிரியதர்ஷினி பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு பிரியதர்ஷினி பணிபுரியும்போது கணவர் ஹரிகணேஷிடம் வேலை சம்பந்தமாக உதவி கேட்டதாக தெரிகிறது. ஹரிகணேஷ் உதவி புரிய மறுத்ததால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த பிரியதர்சினி தனி அறைக்கு உறங்க சென்றுள்ளார். பின்னர் இன்று காலை நீண்ட நேரமாகியும் பிரியதர்சினியின் அறை திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஹரிகணேஷ், கதவை உடைத்து பார்த்துள்ளார். அப்போது பிரியதர்சினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரியதர்ஷினி பனிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் சில மாதங்களாக சிகிச்சை எடுத்தும் வந்துள்ளார். இருப்பினும் அப்பெண் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் குடும்பப் பிரச்னை காரணமா? என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி ஒரு வருடத்தில் புதுமணப் பெண் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போலி சான்றிதழ்களைப் பயன்படுத்திய கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.