ETV Bharat / state

வேளச்சேரியில் தொடரும் மீட்புப் பணி.. மேலும் ஒருவர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டரா?

Velachery: வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய 50 அடி பள்ளத்தில் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

chennai-velachery-trench-accident-update-news
வேளச்சேரியில் 6வது நாளாக தொடரும் மீட்பு பணி.
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 1:53 PM IST

வேளச்சேரியில் 6வது நாளாக தொடரும் மீட்பு பணி.

சென்னை: வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை உள்ள கேஸ் பங்க் அருகே, கட்டிடப் பணிக்காக தோண்டப்பட்ட 50 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில், திடீரென மண்சரிவு ஏற்ப்பட்டது. இதில் 8 பேர் சிக்கிய நிலையில், 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள இருவர் 5 நாள் தேடுதலுக்குப் பிறகு சடமாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், 3வது ஒரு நபர் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் இதே கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வடமாநிலத் தொழிலாளியான தீபக் என்பவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிரது.

வடமாநிலத் தொழிலாளியான தீபக் என்பவர், கடந்த நான்கு நாட்களாக காணவில்லை, அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி உள்ளது என அவருடன் வேலை செய்த தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மேற்கு வங்காளத்தில் இருந்து தீபக்கின் பெற்றோர், சென்னை காவல் துறையினருக்கு இணைய வழியாக புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, பள்ளத்தில் சிக்கி இருக்கும் நபர் தீபக்காக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக 6வது நாளாக மீட்புப் பணிகளானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இந்த இடத்தைச் சுற்றி தொடர்ந்து காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளச்சேரி விபத்து: வேளச்சேரி ஐந்து பார்லங் சாலையில் உள்ள கேஸ் பங்க் அருகே, தனியார் நிறுவனம் கட்டிடம் கட்டுவதற்காக 50 அடி பள்ளம் தோண்டியது. கடந்த டிச.4-ஆம் தேதி ஏற்பட்ட புயல் காரணமாக பள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு இருந்த எட்டு பேர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், 6 பேரை மீட்டுள்ளனர்.

இதில் ஜெயசீலன் (29) மற்றும் நரேஷ் (24) என்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கினர். இதனையடுத்து, உயிரோடு மண்ணுக்குள் புதைந்த இருவரையும் மீட்கும் பணியில் தீயணைப்பு, காவல், மாநகராட்சி மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். பின்னர் 5 நாள் தேடுதலுக்குப் பிறகு இருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

இருவர் கைது: இந்த சம்பவம் தொடர்பாக, கட்டுமான நிறுவன உரிமையாளர் சிவகுமார், அந்நிறுவன கட்டுமானப் பணியிட மேற்பார்வையாளரான சேலையூரைச் சேர்ந்த எழில், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் ஆகிய மூவர் மீதும், அஜாக்கிரதையாக செயல்படுவது, உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது ஆகிய பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து கட்டுமான நிறுவன உரிமையாளர் சிவகுமார் தலைமறைவான நிலையில், மற்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகுமாரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி அருகே மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல்.. போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.