சென்னை சாலிகிராமம், அழகப்பா சாலையில் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ஏடிஎம் மையத்தியத்தில் புகுந்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்துள்ளனர்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஏடிஎம் இயந்திரத்தைப் பார்வையிட்டனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தி இருந்ததைக் கண்டனர்.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து அந்த நபர்களை கண்டுப் பிடிக்க காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணை தவறான உறவுக்கு அழைத்த போலி ரிப்போர்ட்டர் உள்பட இருவர் கைது!