இந்தியாவில் உள்ள சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட ஐந்து பெருநகரங்களில் எந்த நகரில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. சென்னையில் இரண்டு தவணை தடுப்பூசிகளும் அதிக அளவில் செலுத்தப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரம்
- சென்னை - 11 விழுக்காடு
- பெங்களூரு - 10 விழுக்காடு
- டெல்லி, மும்பை - 7 விழுக்காடு
- ஹைதராபாத் - 5 விழுக்காடு
சுமார் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்குத் தடுப்பூசி
பெங்களூருவில் 64 விழுக்காடும், சென்னையில் 43 விழுக்காடும், ஹைதராபாத்தில் 37 விழுக்காடும், மும்பையில் 32 விழுக்காடும் முறையே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
மொத்த மக்கள் தொகையில் 45 வயது மேற்பட்டோரில் 91 விழுக்காடு நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 85 விழுக்காடும், மும்பையில் 70 விழுக்காடும், டெல்லியில் 59 விழுக்காடும், ஹைதராபாத்தில் 48 விழுக்காடும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தடுப்பூசி மையம்
சென்னையில் மொத்தம் 45 கரோனா தடுப்பூசி மையங்கள், 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுவருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம் மூலமும் தடுப்பு ஊசி செலுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பில் 69% இட ஒதுக்கீடு நடைமுறை: அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உத்தரவு