சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்ததை அடுத்து, போக்குவரத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில், தற்போது அது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. அந்த வகையில், சென்னை புறநகர் ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இன்று (டிச.7) முதல், சென்னை செண்டரல் - அரக்கோணம் வழித்தடம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான வழித்தடம், சிந்தாரிப்பேட்டை - வேளச்சேரி இடையேயான வழித்தடங்களில் ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
Suburban trains will run as per scheduled timetable in the following sections on 07.12.2023#Chennai #ChennaiDivision #ChennaiRain pic.twitter.com/AzQK02sZhL
— DRM Chennai (@DrmChennai) December 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Suburban trains will run as per scheduled timetable in the following sections on 07.12.2023#Chennai #ChennaiDivision #ChennaiRain pic.twitter.com/AzQK02sZhL
— DRM Chennai (@DrmChennai) December 6, 2023Suburban trains will run as per scheduled timetable in the following sections on 07.12.2023#Chennai #ChennaiDivision #ChennaiRain pic.twitter.com/AzQK02sZhL
— DRM Chennai (@DrmChennai) December 6, 2023
மேலும், சென்னை சென்ட்ரல் அல்லது சென்னை கடற்கரை - சூலூர்பேட்டை அல்லது குமிடிப்பூண்டி வழித்தடத்தில் வழக்கமான ரயில் சேவைகளுக்கு பதிலாக, திருவொற்றியூரில் இருந்து அரை மணி நேர இடைவேளையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மிதக்கும் சென்னை.. மீள்வது எப்போது? வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் வேதனை