சென்னை எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் ஒருவர் கடந்த சில நாட்களாக பாரிமுனைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்தார்.
கடந்த இரண்டு நாட்களாக இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவருக்கும் இவருடன் பணியாற்றும் காவலர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று (ஏப்ரல் 18) இரவு தமிழ்நாடு சுகாதாரத் துறை அலுவலர்கள், உதவி ஆய்வாளரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
தற்போது, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர் பணிபுரிந்த காவல்நிலையம் மற்றும் பயன்படுத்திய வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அரியலூரில் மருந்தக ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று!