அமெரிக்கா, கத்தாா், ஓமன், குவைத் நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியா்களை ஏற்றிக்கொண்டு நான்கு சிறப்பு மீட்பு விமானங்கள் (ஏர் இந்தியா) நள்ளிரவு சென்னை சா்வதேச விமான நிலையம் வருவதாக இருந்தது. அதைப்போல் சிகாகோ நகரிலிருந்து டெல்லி வழியாக 43 பேர், மஸ்கட்டிலிருந்து 176 பேர் என மொத்தம் 219 இந்தியா்களுடன் இரண்டு சிறப்பு மீட்பு விமானங்கள் சென்னை வந்தன.
அதில், பெரும்பான்மையானவா்கள் மருத்துவச்சான்றிதழ்களுடன் வந்ததால், அவா்கள் அனைவரும் விமான நிலையத்தில் சிறப்பு கவுண்டர் மூலம் இ-பாஸ் பெற்றுக்கொண்டு, வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு அனுப்பப்பட்டனா். மருத்துவச் சான்றிதழ்களுடன் வராதவா்களுக்கு மட்டும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, அவா்களும் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அனுப்பிவைக்கப்பட்டனர்.ஆனால் குவைத், கத்தாாிலிருந்து சென்னை வரவேண்டிய இரண்டு மீட்பு விமானங்கள் நேற்று(செப்.1) வராமல் ரத்து செய்யப்பட்டன. தற்போது குவைத், கத்தாா் நாடுகளில் பயணிகள் மருத்துவப் பரிசோதனை சான்றிதழ்களுடன் வந்தால் மட்டுமே, விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்கின்றனா்.