சென்னையில் வசிக்கும் மக்களில் கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களைக் கண்டறியும் பணி சென்னை மாநகராட்சி சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக 11,963 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அறிகுறி உள்ள நபர்களை காய்ச்சல் முகாம்களுக்கு அல்லது அருகாமையில் உள்ள மாநகராட்சி சுகாதார நிலையங்களுக்கு செல்ல அறிவுறுத்துதல், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்களைச் சேமிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
களப்பணியாளர்களின் கணக்கெடுப்பின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுநாள் வரை 5,08,538 நபர்கள் தொற்று அறிகுறி உள்ள நபர்களாக கண்டறியப்பட்டு அவர்களில் 4,50,873 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த களப்பணியாளர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற நாள்தோறும் ஆலோசனை வழங்கப்படுகிறது. மறுமுறை பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள், கிருமி நாசினி போன்ற பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதியில்லை!