நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் கரோனாவால் நேற்று மற்றும் 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,829 உயர்ந்துள்ளது. இதுதான் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஏற்பட்ட உச்சபட்ச பாதிப்பு ஆகும். சென்னையில் மட்டும் நேற்று (மே 7, 2020) ஒரே நாளில் 324 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மண்டலவாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அப்பட்டியல் பின்வருமாறு:
மண்டலம் | பாதிக்கப்பட்டோர் |
கோடம்பாக்கம் | 387 |
ராயபுரம் | 375 |
தேனாம்பேட்டை | 285 |
அண்ணாநகர் | 191 |
வளசரவாக்கம் | 176 |
தண்டையார்பேட்டை | 168 |
அம்பத்தூர் | 105 |
அடையாறு | 91 |
திருவொற்றியூர் | 40 |
மாதவரம் | 30 |
பெருங்குடி | 20 |
சோழிங்கநல்லூர் | 15 |
மணலி | 13 |
ஆலந்தூர் | 14 |
மொத்தம் | 2,328 |
மேலும், 266 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து, தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:கரோனா தடுப்புப் பணிகளுக்கு கைதிகளை ஈடுபடுத்த உயர் நீதிமன்றம் மறுப்பு!