சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமிநகர் இளங்கோ தெருவில் 250 வீடுகால் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தனிநபர் தொடர்ந்த வழக்கில் வீடுகளை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வீடுகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் வீட்டை அகற்றும் பணியை மேற்கொண்டனர். கிட்டதட்ட 5 நாள்கள் பணி நடைபெற்று கொண்டு வந்த நிலையில் இன்று (மே8) முதியவர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.
சுமார் 80 வீடுகள் அகற்றப்பட்ட நிலையில் இன்று தனது வீட்டை அகற்ற வந்ததால் கன்னையா என்ற முதியவர் தீ குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். "காப்பாத்து, இந்த ஊமை ஜனங்களை காப்பாத்து" என முதியவர் தீ குளித்துள்ளார். இதனை அடுத்து அப்பகுதி மக்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதியவரை சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எப்போது? முதியவர் தீ குளிக்க முயற்சி