சென்னை: தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் (மார்ச் 1 முதல் ஏப்ரல் 2 வரை) மழையின் அளவு 1 மடங்கு அதாவது 6 சென்டிமீட்டரிலிருந்து (இயல்பு நிலை) 12 சென்டிமீட்டர் வரை அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, ''தமிழ்நாட்டில் மார்ச் முதல் மே வரை கோடைகாலம். இந்த கோடைக்காலத்தில் மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலையும் இருக்கும். மார்ச் மாதம் தொடக்கத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்தது. மேலும் மேகக் கூட்டங்கள் இல்லாததால் சூரிய வெளிச்சம் நேரடியாக இருந்தது.
பிறகு, மேற்குத்திசை காற்றின் வேகம் அதிகரித்தபோது வளிமண்டலத்தில் மேலடுக்கு, கீழடுக்குச் சுழற்சியில் மேற்குத்திசை காற்றும்; கிழக்குத் திசை காற்றும் சந்தித்த பகுதியினால் மழை வந்தது. பிறகு அது முடிந்த பிறகு திரும்பவும் வெயில் வருகிறது. தற்போது தென்னிந்திய பகுதிகளில் கடற்பகுதியில் கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்து செல்லக்கூடிய காற்றும், மேற்கிலிருந்து கிழக்காக நகர்ந்து செல்லக்கூடிய வெப்ப மண்டல அலையின் காற்றின் சில நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
அதாவது 30 நாட்களுக்கு ஒரு முறை அலை, 15 நாட்களுக்கு ஒரு முறை அலை என இந்த மாதிரி வெவ்வேறான அலைகள் உள்ளன. இதில் கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்து செல்லக்கூடிய நிலநடுக்கோட்டை ஒட்டி செல்லக்கூடிய ஒரு அலையினால், நிலப்பகுதியில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்தது. இதுவரை, சென்னையைத் தவிர, வேறு மாவட்டங்களில் தான் மழை பெய்து வந்தது. ஆனால், தற்போது சென்னையில் கடந்த இரண்டு நாட்காளாக மழை பெய்து வருகிறது.
இதுவரை சென்னையைத் தவிர வேறு மாவட்டங்களில்தான் மழை பெய்து வந்தது. ஆனால், தற்போது சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழைக்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு, ”சென்னையில் பெய்கின்ற மழையும் கோடை மழை தான். நிலப்பகுதியில் மட்டும் மழை இருக்கக்கூடிய சூழ்நிலை பொதுவாக கோடை மழையின்போது வரக்கூடிய சூழ்நிலையைப் பார்ப்போம்.
இந்த சமயம் கடற்பகுதியை ஒட்டி, தென்னிந்திய பகுதிகளில் காற்றினுடைய மேல் நோக்கிய அமைப்பு நன்றாக இருந்ததால், தென்னிந்திய பகுதிகளில் மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவியது” எனக் கூறினார்.
மேலும் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். வரும் 7 அல்லது 8ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்ற முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வரும் 7 அல்லது 8ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்ற முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது புயலாக மாற வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்விக்கு, “இந்திய கடலைப் பொறுத்தவரைக்கும் இரண்டு சீசன் உண்டு. மார்ச், ஏப்ரல் என்பது ஒரு சீசன். அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்பது ஒரு சீசன். இந்த இரண்டு சீஸனுமே புயல் உருவாவதற்கான சீசன் தான்.
அந்த வகையில் பார்க்கும் போது, வரும் 6ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வளிமண்டல காற்றடுக்குச் சுழற்சியாக உருவாகி, 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியும், 8ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவாகலாம். அதன் பிறகு, அது புயலாக மாறுகிறதா என்பதைக் கண்காணித்து வருகிறோம்” என்றார்.
தமிழ்நாட்டில் மறுபடியும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமா என்ற கேள்விக்கு, ”பொதுவாக வெயிலின் தாக்கம் மே மாதம் அதிகமாக இருக்கும். மே மாதத்தில் உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக பெரும்பாலும் மத்திய வங்கக்கடல் பகுதி வரை வந்தடைந்து, திசை மாறி கிழக்குப் பகுதிக்குச் செல்லும். இதனால் வெப்பம் அதிகரிக்கக் கூடும்” எனப் பதில் கூறினார்.
இதையும் படிங்க: சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு - ரூ.11 கோடி அபராதம் வசூல்!