ETV Bharat / state

ரயில் தண்டவாளத்தின் மீது உடைந்த தண்டவாள கம்பியை வைத்த இளைஞர்கள் கைது! - சென்னை செய்திகள்

சென்னை: ரயில் தண்டவாளத்தின் மீது, உடைந்த தண்டவாள கம்பியை வைத்த இரு இளைஞர்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

crime news
ரயில் தண்டவாளத்தின் மீது உடைந்த தண்டவாள கம்பியை வைத்த வாலிபர்கள் கைது
author img

By

Published : Mar 6, 2021, 2:20 PM IST

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தை நோக்கி கடந்த மாதம் 12ஆம் தேதி நள்ளிரவு கரோனா சிறப்பு ரயிலானது வேகமாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென்று தண்டவாளத்தில் இருந்த கம்பி மீது மோதி ரயிலானது நின்றது.

இது குறித்து ரயில் ஊழியர் கீழே இறங்கி பார்க்கும் போது தண்டவாளத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் 2 அடி நீளமுள்ள உடைந்த ரயில் கம்பியை வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. இந்நிலையில், சிறிது நேரம் கழித்து ரயிலானது புறப்பட்டு சென்றது.

பின்னர் ரயில் தண்டவாளத்தின் மீது கம்பியை வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தென்னக ரயில்வே ஊழியரான சரவணன் பெரம்பூர் ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குபதிவு செய்து சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் 2 இளைஞர்கள் கம்பியை வைத்துவிட்டு நடந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனையடுத்து அந்தக் காட்சிகளில் பதிவான முகத்தை வைத்து வியாசர்பாடியை சேர்ந்த அலெக்ஸ் (22) மற்றும் பாலாஜி(19) ஆகியோரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பெரம்பூர் தண்டவாளத்தின் மீது கஞ்சா அடித்துவிட்டு போதையில் உடைந்த தண்டவாள கம்பியை தண்டவாளத்தின் மீது வைத்ததாக இருவரும் தெரிவித்தனர். இதனையடுத்து இருவர் மீதும் ரயிலை சேதப்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சட்டவிரோத கால்நடை கடத்தல்; ஐபிஎஸ் அலுவலர்களுக்கு சிபிஐ சம்மன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.