சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி, சத்யா நகரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு, ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் பிரசவத்திற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பின்னர், அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இதற்கிடையில், இளம்பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே கரோனா தொற்று தொடர்பான ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
இது தொடர்பாக தகவலறிந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் மருத்துவமனைக்கு விரைந்து, இளம் பெண்ணையும் குழந்தையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இளம்பெண்ணுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என அலுவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், மருத்துவமனைக்கு உள்ளேயும், வெளியேயும் யாரும் செல்லாதபடி அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். மருத்துவமனையை சுற்றி உள்ள சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் கரோனாவிலிருந்து குணமடைந்த 20 பேர்!