ETV Bharat / state

சென்னை துறைமுக நிதி ரூ.45 கோடி மோசடி விவகாரம்:  11 பேர் கைது - சென்னை துறைமுக பொறுப்புக் கழகம்

சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் நிரந்தர வைப்பு நிதியில் 45 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் இந்தியன் வங்கி கிளை மேலாளர் உள்பட 11 பேரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை துறைமுகம்
சென்னை துறைமுகம்
author img

By

Published : Mar 9, 2022, 9:48 PM IST

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை துறைமுக பொறுப்புக்கழகத்தின் சார்பில் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நிரந்தர வைப்பு நிதியாக 100 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சென்னை துறைமுக பொறுப்புக்கழகத்தின் துணை இயக்குநர் எனக்கூறி, கணேஷ் நடராஜன் என்பவர் பல்வேறு போலி ஆவணங்களை சமர்ப்பித்து, நிரந்தர வைப்பு நிதி 100 கோடி ரூபாயை இரு வேறு நடப்பு வங்கிக் கணக்குகளில் மாற்ற முயன்று, பணம் மாற்றப்பட்ட ஒரு வங்கி கணக்கில் இருந்து ரூ.45 கோடிக்கும் மேலான பணத்தை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

15 இடங்களில் சோதனை

இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் அளித்தப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், துறைமுக பொறுப்புக் கழகம் தொடர்புடைய விவகாரம் என்பதால் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. பின்னர் இவ்விவகாரத்தில் சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தி மோசடியில் தொடர்புடைய முன்னாள் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சேர்மதி ராஜா, கணேஷ் நடராஜன், தரகர் மணிமொழி உள்ளிட்ட 11 பேரை கைது செய்து அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர்.

சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் கடந்த 2021ஆம் ஆண்டு அமலாக்கத்துறை இவ்விவகாரம் தொடர்பாகப் பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடையவர்களுக்கு உரிய தமிழ்நாடு முழுவதும் உள்ள 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

11 பேரிடம் தீவிர விசாரணை

இவ்வழக்கில் மோசடி நபர்கள் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிய 45 கோடிக்கும் மேலான பணத்தை சுமார் 230 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள், வாகனங்கள், தங்க நகைகள் உள்ளிட்டப் பல்வேறு சொத்துக்களில் முதலீடு செய்ததையும் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்து முடக்கினர்.

மேலும், மோசடி செய்யப்பட்ட ரூ.45 கோடிக்கும் மேலான பணத்தில் 15.25 கோடி ரூபாய் பணம் மாற்றப்பட்ட போலி நடப்பு வங்கிக்கணக்கில் இருந்து துணை இயக்குநராக நாடகமாடிய கணேஷ் நடராஜன் என்பவரால் எடுக்கப்பட்டதும்; மீதமுள்ள 31.65 கோடி ரூபாய் பணம் 49 பணப்பரிமாற்றங்கள் மூலம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் மாற்றப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட கணேஷ் நடராஜன், சேர்மதி ராஜா, சுடலை முத்து, விஜய் ஹெரால்டு, ராஜேஷ் சிங், சியாத், சாகீர் ஹுசைன், சுரேஷ் குமார், மணிமொழி, செல்வகுமார், அருண் அன்பு ஆகிய 11 பேரை அமலாக்கத்துறையினர் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 1999 இந்திய விமானத்தைக் கடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.