ETV Bharat / state

'மக்களிடம் கிலுகிலுப்பையைக் காட்டி ஏமாற்றி வெற்றிபெற்ற அதிமுக!'

சென்னை: நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக மக்களுக்கு பணம் என்ற கிலுகிலுப்பையைக் காட்டி வெற்றிபெற்றுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

author img

By

Published : Nov 1, 2019, 2:58 PM IST

Updated : Nov 2, 2019, 2:42 PM IST

dmk leader stalin

சென்னை மதுரவாயல் அருகே உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் திமுக கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷின் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்தார்.

மணமக்களை வாழ்த்திய ஸ்டாலின்

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், "1967ஆம் ஆண்டிற்கு முன்பு சீர்த்திருத்த திருமணம் அங்கீகாரம் பெறவில்லை. அண்ணா ஆட்சிக்கு வந்து சட்டப்பேரவையில் சீர்த்திருத்த திருமணத்திற்கு அங்கீகாரம் கொண்டு வரும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

மொழி வாரியாக தமிழ்நாடு என்று பிரிக்கப்பட்டபோது தமிழ்நாட்டிற்கு 'மெட்ராஸ்' என்று பெயர் இருந்தது. அண்ணா ஆட்சியில்தான் தமிழ்நாடு என்ற பெயரை பெற்றுத் தந்தார். தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி எடப்பாடி ஆட்சி இல்லை. எடுபுடி ஆட்சி என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

குறிப்பாக நீட் தேர்வில் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். மத்திய அரசு ஐந்து, எட்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு கொண்டுவரலாம் என்ற முடிவுதான் எடுத்துள்ளது. அதற்கான சட்டங்களோ, உத்தரவோ வரவில்லை. ஆனால், அதற்கு முன்பே தமிழ்நாடு அரசு ஐந்து, எட்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு என்ற சூழ்நிலையை கொண்டு வந்துள்ளது.

அதிமுக அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா?

இவை, தமிழ்நாட்டு மக்களை படிப்பறிவு இல்லாத பாமரனாக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அரசு செயல்படுகிறது. கடந்த இடைத்தேர்தலில் அதிமுக குழந்தைகளுக்கு கிலுகிலுப்பையைக் காட்டுவதுபோல மக்களுக்குப் பணம் என்ற கிலுகிலுப்பையைக் காட்டி வெற்றிபெற்றுள்ளனர். இதன் பின்னர் எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறாது" என்று சூளுரைத்தார்.

மேலும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக மிட்டாய் கொடுத்து வெற்றிபெற்றது என்று விமர்சித்த அதிமுக, தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் அல்வா கொடுத்து வெற்றிபெற்றதா என்று நக்கலாக கேள்வி எழுப்பினார்.

Intro:தமிழக மக்கள் கல்வி அறிவு பெற கூடாது என்ற எண்ணத்தில் தான் மத்திய அரசு செயல்படுத்தாத 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
Body:மதுரவாயல் அருகே தனியார் திருமணம் மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட திமுக கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷின் மகன் மனோஜ்-அஸ்வினி ஆகியோரின் திருமணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தாலி எடுத்துக்கொடுத்து நடத்தி வைத்தார்.பின்னர் பேசிய அவர் 1967 முன்பு சீர்திருத்த திருமணம் அங்கிகாரம் பெறவில்லை.1967 பின்பு அண்ணா ஆட்சிக்கு வந்து சட்டமன்றத்தில் சீர்திருத்த திருமணமனத்திற்கு அங்கிகாரம் கொண்டு வரும் தீர்மானத்தை நிறைவேற்றினார். மாநில வாரிய ,மொழி வாரியாக தமிழகம் என்று பிரிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு மெட்ராஸ் என்று பெயர் இருந்தது அதன் பின்பு அண்ணா ஆட்சியில் தான் தமிழ்நாடு என்ற பெயர் பெற்று தந்தார்.தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி எடப்பாடி ஆட்சி இல்லை,எடுபுடி ஆட்சி என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.குறிப்பாக நீட் தேர்வு இதில் பல மாணவர்கள் தற்கொலைக்கு செய்து கொள்கின்றனர்.
Conclusion:மத்திய அரசு 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பில் பொது தேர்வு கொண்டு வரலாம் என்ற முடிவு தான் எடுத்துள்ளது. அதற்கான சட்டங்களோ,உத்தரவோ வரவில்லை ஆனால் அதற்கு முன்பே தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பில் பொது தேர்வு என்ற சூழ்நிலையை கொண்டு வந்துள்ளது. இது தமிழக மக்கள் படிப்பறிவு இல்லாத மக்காக இருக்க வேண்டும் என தமிழக அரசு திட்டமிட்டு செய்து கொண்டு இருப்பதாக குற்றம்சாட்டினார்.கடந்த இடைத்தேர்தலில் அதிமுக குழந்தைகளுக்கு கிலுகிலுப்பு காட்டுவது போல மக்களுக்கு பணம் என்ற கிலுகிலுப்பு காட்டி வெற்றி பெற்றுள்ளனர்.இதன் பின்னர் எந்த தேர்தலிலும் வெற்றி பெறாது என்றார்.
Last Updated : Nov 2, 2019, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.