ETV Bharat / state

சென்னையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்! - Chennai police seized gold smuggling

சென்னை: யானைகவுனி பகுதியில் சுமார் 60 லட்சம் மதிப்பிலான இரண்டு கிலோ தங்கக் கட்டிகள், மூன்று தங்கக் காசுகளை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர்.

Chennai
author img

By

Published : Mar 8, 2019, 7:14 PM IST

சென்னை-யானைகவுனி பகுதியில் என்.எஸ்.சி.போஸ் சாலையில் காவல் ஆய்வாளர் வெங்கட்குமார் நேற்று இரவு ஒரு மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதியில் கொரியர் சேவைக்குச் சொந்தமான மாருதி ஆம்னி வேன் ஒன்றில் பார்சல் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. இது குறித்து சந்தேகமடைந்த ஆய்வாளர், அந்த தனியார் கொரியர் நிறுவன மேலாளர் முரளி என்பவரை அழைத்து விசாரித்தார்.

இதில் முரளி முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், ஆய்வாளர் சந்தேகமடைந்து அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டார். அப்போதுதான் வேனில் இருந்த பார்சலில் முறைகேடாக பதுக்கல் தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வருவாய் புலனாய்வுத் துறை கண்காணிப்பாளர்கள் ஜெயராமன், தணிக்கைவேல் ஆகியோரை வரவழைத்து, பார்சலை சோதனை செய்தபோது, இரண்டு தங்கக் கட்டிகள்(2 கிலோ), மூன்று சிறிய தங்க காசு(50கிராம்) இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மேலாளர் முரளியிடம் விசாரித்தபோது, சரியான ஆவணங்கள் இல்லாமல் சென்னையிலிருந்து மும்பைக்கு அனுப்பஇருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வுத் துறையினர், மேலாளர் முரளியை அலுவலகத்திற்கு (டிஆர்ஐ) அழைத்துச் சென்றனர். இந்த கடத்தல் தங்கக் கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் எனவும் தெரியவந்தது.

சென்னை யானைகவுனி பகுதியில் 60 லட்சம் மதிப்பிலான 2 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் 3 தங்க காசுகளை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள்  பறிமுதல் செய்து விசாரணை

சென்னை யானைகவுனி
என்.எஸ்.சி. போஸ் சாலையில் நேற்றிரவு 1 மணியளவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பார்சலில் அனுப்ப இருந்த தங்க கட்டிகளை காவல் ஆய்வாளர்  வெங்கட்குமார் ரோந்துப் பணியில் இருந்தபோது அங்குள்ள கொரியர் சர்வீசுக்கு சொந்தமான மாருதி ஆம்னி வேனில்  ஏற்றிய பார்சல் குறித்து சந்தேகத்தின் பேரில் ஆய்வாளர் விசாரணை நடத்தினார்

 தனியார்பார்சல் நிறுவன மேலாளர் முரளி  முன்னுக்கு பின் முரணாக பதில்  கூறவே விசாரணை தீவிரமானது. அப்போதுதான் வேனில் இருந்த பார்சலில் முறைகேடான பதுக்கல் தங்க கட்டிகள்  இருப்பதை அறிந்து கொண்டார்.  வருவாய் புலனாய்வு துறை கண்காணிப்பாளர்கள் ஜெயராமன், தணிகைவேல் ஆகியோரை வரவழைத்து அவர்கள் மூலமாக பார்சலை பிரித்து சோதனை செய்தபோது ஒரு கிலோ அளவுள்ள இரண்டு தங்க கட்டிகள் (2 கிலோ) மற்றும் சிறிய தங்க காசு - 3 (சுமார் 50 கிராம்) அதில் இருந்தது தெரிய வந்தது

அவரிடம்  விசாரித்தபோது சரியான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அதிகாரிகள் தங்கட்டி மற்றும் மேலாளர் முரளி ஆகியோரை (DRI) அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். மேற்படி தங்க கட்டிகளை சென்னையில் இருந்து மும்பை அனுப்புவதாக மேலாளர் தெரிவித்துள்ளார்.  தங்க கட்டிகளின் மதிப்பு சுமார் ரூபாய். 60 லட்சம் இருக்கும்.  தங்க கட்டிகள் அயல் நாட்டை சார்ந்தது குறிப்பிடத்தக்கது..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.