ETV Bharat / state

ஊரடங்கு விதிமீறல் : 6.85 லட்சம் வாகனங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர்! - Chennai district news

சென்னை : ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 146 நாள்களில் 9,73,576 பேரை காவல் துறையினர் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

காவல் துறையினர்
காவல் துறையினர்
author img

By

Published : Aug 17, 2020, 11:52 AM IST

கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவை மீறுபவர்களை காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்தும், வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 146 நாள்களில் விதிகளை மீறியதற்காக 9,73,576 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 6,85,415 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 20,69,15,048 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.