ETV Bharat / state

இளைஞரை கடத்தி நகை, ஐபோன் பறிப்பு.. 24 மணிநேரத்தில் சிக்கிய பலே கொள்ளையர்கள்!

author img

By

Published : Apr 9, 2023, 7:05 AM IST

சென்னையில் இளைஞரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை பறித்த இரண்டு பேரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஊழியரை கடத்தி நகை மற்றும் ஐபோன் பறிப்பு 24மணி நேரத்தில் குற்றவாளிகள் இருவர் கைது

சென்னை: திருச்சி மாவட்டம், தென்னூர் காஜா தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது அஸ்வர் (வயது 27). இவர் திருச்சியில் சொந்தமாக புர்கா கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த இரு மாதங்களாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அல்பான் (வயது 22) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் 5ம் தேதி உரிமையாளர் அஸ்வர் ஒன்பது சவரன் தங்கச் செயின் மற்றும் 10 ஐபோன்களை ஊழியர் முகமது அல்பானிடம் கொடுத்து, அதை, சென்னை திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையில் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அல்பான் திருச்சியில் இருந்து பேருந்து மூலமாக சென்னை கோயம்பேட்டிற்கு 6ம் தேதி காலை நகைகளுடன் வந்துள்ளார்.

பின்னர் ஓலா காரை புக் செய்து திருவல்லிக்கேணி பகுதிக்குச் செல்லக் காத்திருந்த போது, அங்கே காரில் வந்த மூன்று நபர்கள் அல்பானை தாக்கி வண்டலூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.பின்னர் அல்பானிடமிருந்து ஒன்பது சவரன் நகை மற்றும் 10 ஐபோன்களை பறித்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அல்பான் உரிமையாளர் அஸ்வரிடம் தெரிவித்துள்ளார். உடனே அஸ்வர் நகை மற்றும் செல்போன் பறிப்பு தொடர்பாக சி.எம்.பி.டி காவல் நிலையத்தில் கடந்த 6ம் தேதி புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி காட்சியில் பதிவான முக அடையாளங்கள் மற்றும் காரின் பதிவு எண்ணை வைத்து திருச்சி சென்ற தனிப்படை போலீசார் அங்கே பதுங்கி இருந்த இரு குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 190 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஐபோன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை விட மீட்கப்பட்ட பொருட்கள் அதிகமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் புகார் அளித்த அஸ்வரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அஸ்வர் துபாய் போன்ற வெளிநாடுகளில் தங்கம் மற்றும் ஐபோன்களின் விலை குறைவு என்பதால், அங்கிருந்து தங்கம் மற்றும் ஐபோன்களை வாங்கி வந்து தமிழ்நாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதே போல வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த 20 ஐபோன்கள் மற்றும் 1,500 கிராம் தங்கத்தை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு நபரிடம் கொடுக்க ஊழியர் அல்பானிடம் கொடுத்து அனுப்பியதாகவும்,ஆனால், அல்பானிடம் கொடுத்த பைக்குள் 9 சவரன் செயின் மற்றும் பத்து ஐபோன்கள் இருப்பதாக மட்டுமே தெரிவித்ததாகவும் உரிமையாளர் அஸ்வர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில், திருச்சி திருவெறும்பூர் தாலுகா சேர்ந்த அஷ்ரபுதீன் (வயது 38) மற்றும் வசந்தகுமார் என்பது தெரியவந்தது. இதில் அஷ்ரபுதின் ஏற்கனவே அஸ்பரிடம் வேலை பார்த்து வந்ததும், சில மாதத்திற்கு முன்னால் வேலையை விட்டு நிறுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், அஸ்பர், தங்கம் விற்பனை செய்வது பற்றி நன்கு அறிந்தமையால், முக்கிய குற்றவாளியான பிரவீன் என்பவருடன் இணைந்து பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய நபரான பிரவீனை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்த சிறுமி.. சேலம் போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.