ETV Bharat / state

சர்ச்சை பேச்சு: நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு - filed case

பட்டியலினத்தவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது சென்னை காவல் துறை ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

நடிகை மீரா மிதுன் மீது  வழக்குப் பதிவு
நடிகை மீரா மிதுன் மீது  வழக்குப் பதிவு
author img

By

Published : Aug 8, 2021, 3:21 PM IST

சென்னை: தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி, 8 தோட்டாக்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் சில நாள்களுக்கு முன் பட்டியலினத்தவர்கள் குறித்து இழிவாக பேசியும் பட்டியலின இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் சினிமா துறையில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையாக வெடித்தது.

கண்டனம்

பல்வேறு தரப்பினரும் மீரா மிதுனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: நடிகை மீரா மிதுன் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.