ETV Bharat / state

ஸ்கேன் செய்தால் போதும் மொத்த டீடெய்லும் வந்துவிழும்: காவலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் QR Code! - சென்னை காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட QR Code

கட்டாயப் பயணமாக வெளியூர் செல்வோரை காவலர்கள் வாகனச் சோதனை செய்யும் நிலை ஏற்பட்டால், QR Code ஐை அவர்கள் ஸ்கேன் செய்தால் போதும். வெளியூர் செல்வோர் எங்கு செல்கிறார், அவர் என்ன காரணத்திற்காகச் செல்கிறார் என்ப போன்ற விவரங்கள் காவலர்கள் வைத்திருக்கும் செல்போன்களில் தெரிந்துவிடும்.

காவலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் QR Code

author img

By

Published : May 14, 2020, 4:10 PM IST

கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ, வெளிமாநிலங்களுக்கோ செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, உறவினர் இறப்பு சம்பவத்தில் கூட கலந்துகொள்ள முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இச்சூழலில், அத்தியாவசியத் தேவைகளுக்காக பயணிக்க விரும்பும் சென்னை மக்கள், specialpasscovid19.gcp@gmail என்ற மெயில் மூலம் பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம் என, மாநகர காவல் துறை தெரிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பலரும் மேற்குறிப்பிட்ட இமெயில் முகவரிக்கு பாஸுக்காக விண்ணப்பித்திருந்தனர்.

காவலர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் QR Code

ஆனால் இமெயில் மூலம் முறையான பதில் வரவில்லை எனக் கூறி 1,000க்கும் மேற்பட்டோர் காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பிக்க படையெடுத்தனர். இதனைக் கண்டு அதிர்ந்துபோன காவல் துறை, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்குச் செல்வோர், ரத்த உறவு நபரின் இறப்புக்குச் செல்வோர், முறையான மருத்துவச் சீட்டுடன் மருத்துவச் சிகிச்சைக்குச் செல்வோர் ஆகியோர் மட்டுமே பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது.

இதனிடையே, பெரியப் புள்ளிகளுக்கு மட்டும் தவறான முறையில் காவல் துறையினர் பாஸ் வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர், ஆட்சியர், வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் பாஸ் வழங்க அரசு அனுமதி அளித்தது. இதன்பின், அத்தியாவசியத் தேவைகளுக்காக பயணம் செல்வோருக்கு முறையாக பாஸ் வழங்கப்பட்டது.

பாஸ் வழங்கிய பின்பு, வாகனச் சோதனையில் ஈடுபடும் காவலர்கள், வாகன ஓட்டிகளின் தகவல்களை அறிந்துகொள்ள அவர்களின் அருகில் சென்று பாஸை காண்பிக்க சொல்லிக் கூறுவது வழக்கமாக இருந்தது. கரோனா பரவலைத் தடுக்க அனைவரும் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அரசு கூறியுள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் இருப்பதால் அவர்களால் பின்பற்ற முடியவில்லை.

இதனால் காவலர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் இருந்ததால், அவர்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க, செல்போன் மூலம் QR Codeஐ ஸ்கேன் செய்யும் முறையை பாஸ்களில் இணைத்து வழங்க காவல் துறை தரப்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போது வழங்கப்பட்டு வரும் அனைத்து பாஸ்களிலும் QR Code இணைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் கட்டாயப் பயணமாக வெளியூர் செல்வோரை காவலர்கள் வாகனச் சோதனை செய்யும் நிலை ஏற்பட்டால், QR Codeஐ அவர்கள் ஸ்கேன் செய்தால் போதும். வெளியூர் செல்வோர் எங்கு செல்கிறார், அவர் என்ன காரணத்திற்காகச் செல்கிறார் என்பன போன்ற விவரங்கள் காவலர்கள் வைத்திருக்கும் செல்போன்களில் தெரிந்துவிடும்.

பிரச்னை ஏதுமின்றி முறையான காரணம் இருந்தால், அந்த நபரை காவலர்கள் அனுப்பி வைப்பர். இதன்மூலம், ஊருக்கு அவசரமாக செல்லக் கூடியவர்களை, சோதனைச் சாவடிகளில் காவலர்கள் வழிமறித்து பாஸ் சோதனைக்காக பல மணி நேரம் நிற்க வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த முறையால், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க முடிவதாகவும், அச்சமின்றி பணியாற்ற இயல்வதாகவும் கூறி காவலர்கள், சென்னை காவல் துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த சின்ஹாவிடம் கேட்டபோது, "அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்ல விரும்புவோர் https://tnepass.tnega.org என்ற வலைதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். அவர்களின் முழு தகவல்கள் பெற்று, பின் பாஸ் வழங்க அரசு அனுமதித்தால், பாஸுக்கு கீழே உள்ள QR Code ஐை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதன்மூலம் தகுந்த இடைவெளி பின்பற்றப்பட்டு, கரோனா தொற்று பரவாமல் தடுக்கலாம்" என்றார்.

இதையும் படிங்க: 'எந்தெந்த தேதியில எங்கெங்க போனீங்கன்னு நீங்க மறக்கலாம்... ஆனா நான் மறக்க மாட்டேன்' - சொல்வது காவல் துறையின் ஐ ட்ராக்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.