ETV Bharat / state

சென்னையில் இவ்வளவு குற்றங்களா..? - புள்ளி விவரங்கள் வெளியீடு!

கடந்த ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவர அறிக்கையை சென்னை காவல் துறை வெளியிட்டுள்ளது.

சென்னை காவல் துறை
சென்னை காவல் துறை
author img

By

Published : Jan 8, 2023, 3:19 PM IST

சென்னை: 2022ஆம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு 97 கொலைகள் மற்றும் 4 ஆதாயக் கொலைகள் என மொத்தம் 101 கொலைகள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு 104 கொலைகள் நடைபெற்ற நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக 100ஐ தாண்டி கொலைச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் முன்விரோதம் காரணமாக நடைபெறும் கொலைகளின் எண்ணிக்கை பெருவாரியான அளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு 36 முன்விரோத கொலைகள் நடந்த நிலையில், கடந்த ஆண்டு 20ஆக குறைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டதும், ஏறத்தாழ 74 ரவுடிகள் கைது செய்யப்பட்டதுமே குற்றச் சம்பவங்கள் குறைந்ததற்கான காரணம் என காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் 3,610 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டதால் முன்விரோதக் கொலைகள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், தீவிர குற்றத்தடுப்பு பிரிவின் மூலம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ரவுடிகளின் அட்டகாசம் தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019, 20ஆம் ஆண்டுகளில் நடந்த வழிப்பறி கொள்ளைகளை ஒப்பிடும்போது கடந்த இரு ஆண்டுகளில் 50 சதவீதத்திற்கும் குறைவாக கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறு உள்ளதாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் சாதாரண திருட்டுச் சம்பவங்கள் 2022ஆம் அண்டு 20 சதவீதம் அதிகரித்து 503 கொள்ளைகள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பெரிய திருட்டுச் சம்பவங்களும் கடந்தாண்டுகளைக் காட்டிலும் அதிகரித்து 35 சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாகவும், குறிப்பாக வட சென்னையை விட தென் சென்னையில் அதிக அளவில் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த DACO என்ற குற்றச் செயல் தடுப்புப் பிரிவு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த ஒன்றரை ஆண்டில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 165 பேர் உள்பட, 5 ஆயிரத்து 636 பேரை கைது செய்ததாக கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 633 பேர் இளஞ் சிறார்கள் என்பதால், அவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக பறவை என்ற திட்டம் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் சமூகத்தின் மறு ஒருங்கிணைப்பு குறித்து கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறார் மற்றும் சிறுமியர் குழுக்கள் மூலம் 5 ஆயிரத்து 575 சிறுவர், சிறுமியர்கள் சமூக விரோதச் செயல்களில் இருந்து விலக்கப்பட்டு, அவர்களின் ஆர்வங்களை வளர்ப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு 424 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 2021ஆம் ஆண்டு 270 பேர் மீதும், 2020ஆம் ஆண்டு 334 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் மயிலாப்பூரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் ஆறு மணி நேரத்திற்குள் கொலையில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதும், அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை கண்டுபிடித்து 31.7 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டது என சென்னை காவல்துறையின் சிறப்பான செயல்பாடுகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்குகளைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் முந்தைய ஆண்டில் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டி.ஆர். பாலு வாங்கிய காருக்கு பணம் தரவில்லை, பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.