சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இந்நிலையில், சில இடங்களில் இன்னும் மழை நீர் வடியாமல் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை காவல்துறை மாவட்டங்களில் தனித்தனியாக உள்ள பேரிடர் மீட்புப் படை குழுவினர் களம் இறங்கி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னையில் கூடுதல் காவல் பேரிடர் மீட்பு படைக் குழுவினரைக் களம் இறக்கி உள்ளதாகவும், அதற்கான உதவி மையம் எண்களை காவல்துறை அறிவித்துள்ளது.
-
🌀 #Michaungcyclone
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) December 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Dedicated Helpline numbers from #greaterchennaipolice to render any help of rescue and relief to Public:#ChennaiRain #Update@SandeepRRathore@R_Sudhakar_Ips@ChennaiTraffic pic.twitter.com/qaol1WrEcE
">🌀 #Michaungcyclone
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) December 6, 2023
Dedicated Helpline numbers from #greaterchennaipolice to render any help of rescue and relief to Public:#ChennaiRain #Update@SandeepRRathore@R_Sudhakar_Ips@ChennaiTraffic pic.twitter.com/qaol1WrEcE🌀 #Michaungcyclone
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) December 6, 2023
Dedicated Helpline numbers from #greaterchennaipolice to render any help of rescue and relief to Public:#ChennaiRain #Update@SandeepRRathore@R_Sudhakar_Ips@ChennaiTraffic pic.twitter.com/qaol1WrEcE
அந்த வகையில் 2345 2359, 2345 2360, 2345 2361, 2345 2377 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், 2345 2437 என்கிற காவல்துறையின் வெள்ள கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும், வெள்ள நீரால் வீட்டில் சிக்கி உள்ள மக்கள், தங்களுக்குத் தேவைப்படும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்பட்டாலும், மேற்கண்ட அலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகள் கேட்கலாம் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடரும் மீட்புப்பணி; சென்னையில் நாளையும் (டிச.7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!