ETV Bharat / state

லாரி ஓட்டுநர் தூக்கம்: தொடர் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

சென்னை: பெருங்களத்தூரில் லாரி ஓட்டுநர் தூங்கியதால் 2 அரசு பேருந்துகள் உட்பட 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

lorry
lorry
author img

By

Published : Dec 16, 2020, 7:16 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையம் முன்பு சேலத்திலிருந்து சென்னைக்கு மைதா மாவு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது லாரி ஓட்டுநர் வெங்கடாச்சலம் கண் அயர்ந்ததாக கூறப்படுகிறது. இதில் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 2 அரசு பேருந்துகள் உள்ளிட்ட 4 வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

லாரி விபத்து

மேலும் பெருங்களத்தூர் சிக்னலில் கடக்க முயன்ற பொதுமக்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். இதில் லாரியின் சக்கரம் காலில் ஏறியதில் பீர்க்கன்காரணை சேர்ந்த பத்பநாபன் என்பவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

lorry
இறந்து போன பத்பநாபன்

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த மணிகண்டன், டில்லிபாபு ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். விபத்து குறித்து குரோம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வெங்கடாச்சலத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

lorry
லாரி ஓட்டுநர் வெங்கடச்சலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.