தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
சென்னை உள்நாட்டு முனையத்திலிருந்து புறப்படும் 28 விமானங்களில் பயணிக்க இன்று சுமார் 2,450 பேர் மட்டுமே வந்துள்ளனர். சென்னைக்கு வந்த 28 விமானங்களில் சுமார் 2,400 பேரும் வந்துள்ளனர்.
ஆனால், நேற்று சென்னைக்கு வந்த 29 விமானங்களில் சுமார் 3 ஆயிரம் பேரும், சென்னையிலிருந்து புறப்பட்ட 29 விமானங்களில் 3,200 பேருமாக மொத்தம் 6,200 பேர் பயணித்தனர். நேற்றோடு ஒப்பிடுகையில் இன்று பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஆயிரத்து 350ஆக குறைந்துள்ளது.
இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கும், தமிழ்நாட்டில் வரும் பயணிகளுக்கு இ-பாஸ் வழங்காமல் அலைக்கழிப்பதுமே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது