சென்னை அடுத்த பழைய பல்லாவரம் கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (69). அதே பகுதியில் 10 ஆண்டுகளாக சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்திவருகிறார். தனது நண்பர் முருகன் என்பவருக்கு இடைத்தரகராக செயல்பட்டு, கஸ்தூரி பாய் தெருவில் தினேஷ் என்பவருக்கு சொந்தமான 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த நிலம் ஏற்கெனவே நாங்கு நபர்கள் பெயரில் பதிவுசெய்யபட்டுள்ளதாக முருகனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து முருகன் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த சூழலில், தொடர்ந்து சிலர் செல்வராஜை மிரட்டி வந்துள்ளனர். இதனால் சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவரை மிரட்டியவர்கள் பற்றி நான்கு பக்கங்களில் எழுதி வைத்து விட்டு அவரது கடையில் நேற்று இரவு தற்கொலையால் உயிரிழந்தார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் பல்லாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் செல்வராஜ் எழுதிய கடிதங்களை கைப்பற்றி அதில் குறிப்பிடபட்டுள்ள தினேஷ், ஜோசப், ஜெயகாந்தன், சந்தானம், குமார், பிரபு ஆகிய ஆறு நபர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த ஆறு பேரும் மீது ஏற்கெனவே நில மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:உயிர் பறிக்கும் கடன் செயலிகள்!