ETV Bharat / state

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனை வெளியேற்றம் - தட்ஜனா மரியா

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா முதல் சுற்றிலே தோல்வி அடைந்து வெளியேறினார்.

முதல் சுற்றில் இந்திய வீராங்கனை வெளியேற்றம்

author img

By

Published : Sep 14, 2022, 7:16 AM IST

சென்னை : சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சர்வதேச தரவரிசையில் 333வது இடத்திலும், இந்திய தரவரிசையில் முதலிடத்திலும் உள்ள இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, தரவரிசையில் 85வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீராங்கனை தட்ஜனா மரியாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

நடப்பாண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி போட்டி வரை முன்னேறியிருந்த ஜெர்மனியின் மரியா, ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி தொடர்ந்து புள்ளிகளை கைப்பற்றினார். முதல் செட் ஆட்டத்தில் இந்திய வீராங்கனையை ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல் தனக்கே உரித்தான பாணியில் புள்ளிகளை குவித்த மரியா 6-0 என எளிதாக கைப்பற்றினார்.

தொடர்ந்து இரண்டாவது செட் ஆட்டத்திலும் மரியாவின் கையே ஓங்கியிருந்தது. அந்த செட்டையும் 6-1 என்ற கணக்கில் வசப்படுத்தி 2-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்திய வீராங்கனை அங்கிதா ஒட்டுமொத்தத்தில் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்து வெளியேறினார்.

இதையும் படிங்க: காமன்வெல்த் கராத்தே போட்டி: வென்று திரும்பிய தமிழ்நாடு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.