ETV Bharat / state

சென்னை நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமாயக்க திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை - Minister KN Nehru

ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் சென்னை நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமாயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் கே.என் நேருவை ஜெர்மன் இந்திய நீர் தொழில்நுட்பக் கூட்டமைப்புக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

சென்னை நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நவீனமாயக்க திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு ஒப்பந்தம்

author img

By

Published : Sep 23, 2022, 7:50 AM IST

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள 23 எம்.எல்.டி (MLD) கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 1974 ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையம் தற்போது வழக்கத்திற்கு வந்துள்ள புதிய முறைகளின்படி கைவிட வேண்டிய நிலையில் உள்ளது.

அதேநேரம் தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் வகையில், சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள 23 எம்எல்டி (MLD) திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை, நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றியமைக்கப்பட உள்ளது. சுத்திகரிக்கப்படாத அல்லது போதுமான அளவில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரின் வெளியேற்றம் காரணமாக நகரங்களில் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மனித ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் மோசமாக பாதிக்கிறது.

இதனால் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. இதனால் நீர் ஆதாரங்களை முறையற்ற முறையில் நிர்வகிப்பதற்கும் பங்களிக்கிறது. இது பெரும்பாலும் அப்பகுதியில் அதிகமான நீர் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கிறது.

இந்நிலையில் ஜெர்மன் அரசின் முழுமையான நிதியுதவியுடன் நெசப்பாக்கத்தில் உள்ள 23 எம்எல்டி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாக அமைப்பது மற்றும் மறுபயன்பாடு “ஷோகேஸ் இன்” திட்டம், உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப, ஜெர்மன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தியாவில்அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கான கருத்தியல் வடிவமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் எதிர்காலத் திட்டங்களுக்கு உலக அளவில் ஒரு முன்னோடி திட்டமாகச் செயல்படும். மேலும் பயிற்சி நோக்கங்களுக்காகவும் இத்திட்டம் பயன்படுத்தப்படும். இந்த முயற்சி இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னை நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நவீனமாயக்க திட்டம்

இது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று (செப் 22) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை ஜெர்மன் இந்திய நீர் தொழில்நுட்ப கூட்டமைப்புக் குழுவினர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து இத்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம், ஜெர்மன் இந்திய நீர் தொழில்நுட்ப கூட்டமைப்பின் குழுவினர் வழங்கினர்.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, ஜெர்மன் இந்திய நீர் தொழில்நுட்ப கூட்டமைப்புக் குழுவினர், டாக்டர் ஹான்ஸ் ஸ்பீத், தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர் ஹானஸ் பீத், மூத்த விஞ்ஞானி டாக்டர் மார்க் பெக்கெட், டாக்டர் மைக்கேல் குன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: துறைமுகங்கள் மசோதா 2022 மாநில உரிமைகளை பறிக்கும்: முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.