ETV Bharat / state

கடற்படை பேருந்து விபத்து - கடற்படை வீரரின் கர்ப்பிணி மனைவி, குழந்தை பலி..

கடற்படை பேருந்து மோதிய விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற கடற்படை வீரரின் கர்ப்பிணி மனைவி மந்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை
சென்னை
author img

By

Published : Nov 19, 2022, 11:20 AM IST

சென்னை: சென்னை பல்லவன் சாலை அருகே கடற்படை குடியிருப்பில் வசித்து வருபவர் சிவாரெட்டி. இவரது மனைவி லலிதா. கடற்படை அதிகாரியான சிவாரெட்டி இரவு தனது 8 மாத கர்ப்பிணி மனைவி லலிதாவுடன் இரு சக்கர வாகனத்தில் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். பின்னர் கடற்கரையில் இருந்து இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

காமராஜர் சாலை மாநிலக் கல்லூரி அருகே சென்ற போது பின்னால் வந்த கடற்படைக்கு சொந்தமான பேருந்து சிவாரெட்டியின் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த லலிதாவின் தலையில் கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து ஏறி இறங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே லலிதா பரிதாபமாக உயிரிழந்தார். கண் முன்னே மனைவி இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவாரெட்டி, குழந்தையையாவது காப்பாற்றா எண்ணி ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணா சதுக்கம் போலீசார் லலிதாவின் உடலை கைப்பற்றி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

குழந்தையை உயிருடன் மீட்க போராட்டம் நடத்திய மருத்துவர்களின் முயற்சி இறுதியில் தோல்வியில் முடிந்தன. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கடற்படை பேருந்தை பொது மக்கள் மடக்கிப்பிடித்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கடற்படை சிப்பாய் ராகேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; டிசம்பர் 7ல் துவங்குகிறது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.